நரை முடி போக்க உங்களுக்கான டிப்ஸ்...!!

share on:
Classic

வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது. இந்த முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளது.

வெள்ளை முடிகளை கருமையாக்க சில வழிகள் உள்ளது. அதுவும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வும் காணலாம். வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் எ, மக்னேசியம், கேரட்டின் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. இவை தான் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தலைமுடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சேதம் அடைந்த முடிகள் தான். பிறகு முடியில் உள்ள அழுக்குகளை வெளியேற்றினாலே முடி ஆரோக்கியமாக இருக்கும்

தற்போது வெள்ளை முடிகளை தடுக்கம் வழிமுறைகளை காண்போம் :

தேவையான பொருட்கள் :
கற்றாழை சாறு - 2 ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி - 1
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

முதலில் கற்றாழையை அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும். இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் நரை முடிகள் வராமல் தடுக்கலாம்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan