நீளமா நகம் வளர்க்காதீங்க..! நகப் பராமறிப்புக்கு சில டிப்ஸ்..!!

share on:
Classic

நீளமாக நகம் வளர்ப்பதை விரும்பாத பெண்களே இருக்கமுடியாது. தற்போது, நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ் மற்றும் நெயில் ஆர்ட் செய்து கொள்வது ட்ரெண்டாக உள்ளது. ஆனால் நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக பராமரிக்க உங்களுக்காக சில டிப்ஸ் இதோ..!!

நகப் பராமரிப்புக்கு டிப்ஸ்...
கருப்பு, டார்க் ப்ளூ, டார்க் மெருன் போன்ற அடர் நிற நெயில் பாலிஷ்களில் நகத்தின் நிறமே மாறக்கூடிய அளவுக்கு கெமிக்கல் அதிகமாக இருக்கிறது. அதேபோல் லைட் கலர்களில் கெமிக்கல்ஸ் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் முடிந்தவரை அடர் நிர பாலிஷ்களை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், தெவைப் படும்போது, ட்ரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷை அப்ளை செய்துவிட்டு, அதன் மேலே நீங்கள் விரும்புகிற டார்க் கலரை அடித்துக்கொள்ளலாம்.

பெரும்பாலும், நக நுனிகளில் தான் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும். அதனால், நீளமான நகங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அழுக்கில்லாமல் சுத்தமாகப் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக, 15 நாள்களுக்கு ஒரு தடவை நகங்களை ட்ரிம் பண்ணுங்கள்.

தற்போது பலரும், கை விரல்கள், கால் விரல்களில் நகம் வளர்த்து நெயில்பாலிஷ் போட்டுப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி வைத்திருக்கிறார்கள். நிளமாக இருப்பதினால், எதிலாவது வேகமாக பட்டால் உடனே உடைந்து, விரல் அழகை கெடுத்துவிடும். அதனால், நகங்களை விரலுக்குத் தகுந்தபடி போதுமான அளவுக்கு மட்டுமே வளர்க்கவும்.

சிலருக்கு நகத்தின் மேல் ஒரு லேயர் மட்டும் உரிந்துகொண்டே வரும். இவர்கள், வாரத்துக்கு இரண்டு முறை, 10 மில்லி ஆப்பிள் சிடர் வினிகர், 5 மில்லி பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து நகங்களில் 10 நிமிடங்கள் ஊறவைத்தால், நகங்கள் உரியாது. வாரத்துக்கு ஒரு தடவை 10 செகண்டு மட்டும் எமரி போர்டினால் லேசாகத் தேய்த்தால், நகம் பளபளப்பாக இருக்கும்.

பார்லர்களில் மெனிக்யூர் என்கிற பெயரில், வீரியம் அதிகமான சோப்பு மற்றும் ஷாம்புவில் ஊற வைத்தால் சருமத்தின் தோலில் இருக்கிற எண்ணெய்ப்பசையெல்லாம் போய் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். அதற்கு பதிலாக வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் எப்சம் சால்ட், 1 டீஸ்பூன் கல் உப்பு, 1 டீஸ்பூன் விளக்கெண்ணேய், ரோஸ் ஆயில் மற்றும் எலுமிச்சைச்சாறு (இரண்டும் 2 சொட்டுகள் மட்டும்) ஆகியவற்றை கலந்து விரல்களை ஊற வைத்தால், நகம் சுத்தமாவதுடன் பலமாக இருக்கும். இதை 15 நாள்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.
 

News Counter: 
100
Loading...

Ragavan