கோடை கால பிரச்சனைகளை தீர்க்க உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

கோடை காலம் வந்துவிட்டாலே உடலில் வெப்பம் அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். அதாவது சருமப் பிரச்சனைகள், கை, கால், மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. 

இந்த பிரச்சனைகளை தீர்க்கும் முறைகளை காணலாம்.

வெயில் காலத்தில் ஏற்ற உணவுகளான மோர், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறி மற்றும் பழங்களை அடிக்கடி சாப்பிடலாம்.
கை மற்றும் கால் பகுதியில் அதிகம் எரிச்சல் உள்ளவர்கள் பாகற்காயை நறுக்கி அதனை பாதத்தில் மற்றும் உள்ளங்கையில் தேய்த்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வெள்ளரிக்காயை வட்ட வடிவத்தில் நறுக்கி கண்களின் மேல் வைத்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு தொதிக்க வைத்து ஆறியதும் அந்நீரில் தலைக்கு குளித்து வந்தால் தலையில் வெயில் கால கட்டிகள் வராமல் தடுக்கும்.
கோடை முடியும்வரை தினசரி இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, கரும்பு ஜூஸ் என ஏதாவது ஒன்றினை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்துகளை தக்க வைப்பதுடன் உடல் உஷ்ணம் தொடர்பாக ஏற்படக்கூடிய சிறுநீர் பிரச்சினைகளையும் தடுக்கும். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan