உடல் வெப்பத்தால் அவதியா...? உங்களுக்கான டிப்ஸ்...!!

share on:
Classic

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது. ஒவ்வொருவரும் கோடையின் வெயிலால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் மற்றும் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உண்பது நல்லது. உடல் வெப்பத்தை குறைக்கும் முறைகளை தற்போது பார்கலாம்

  • மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
  • இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.
  • இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பருக வேண்டும். சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.
  • நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
  • வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது.
  • முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan