கார்த்திகை தீபத் தேரோட்டம் துவங்கியது

share on:
Classic

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திபெற்றது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கொடியேற்றம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் விநாயகர் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். இதனைத் தொடர்ந்து, கார்திகைதீப திருவிழா தேரோட்டம் துவங்கியது முருகர், அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள்  தேரோட்டமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர். இந்த தேரோட்டத்தையொட்டி, முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

admin