திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய அரசு அமையும் - மம்தா பானர்ஜி

share on:
Classic

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய அரசு அமையும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர்தார் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில் புதிய அரசு அமையும் என்று கூறினார். மேலும், பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்று கூறிய அவர், “மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெறும் பொய்களை மட்டுமே பேசி வந்துள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan