டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்

Classic

சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில், பொதுமக்கள் இன்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனையொட்டி, டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில், பயணிகள்  இன்று கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றிரவு 11 மணி வரை கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind