விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி..!

share on:
Classic

சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இந்தாண்டு 2,000 புதிய பேருந்துகள் ரூ. 600 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும் என்று தெரிவித்தார். ரூ.120 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மேன்மை மையம் அமைக்கப்படும் என்றும், 296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ. 79.93 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் எனவும் அறிவிப்புகள் வெளியிட்டார். கரூர், தருமபுரி, தேனி, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan