வரும் 8ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

share on:
Classic

தமிழக சட்டப்பேரவையில், 2019-20-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 8ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை கடந்த 2-ந் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

 

News Counter: 
100
Loading...

aravind