முதலமைச்சர் பழனிசாமி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..!

share on:
Classic

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அதற்காக அம்மாபேட்டையில் உள்ள பட்டை அம்மன் கோவில் பகுதியில் நடைபயணமாக சென்ற அவர், கடைகள் தோறும் சென்று வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்தும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் ஆதரவு திரட்டினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமியைக் காண சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில், முதலமைச்சர் பழனிசாமி, வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோர் தேநீர் அருந்தினர்.

News Counter: 
100
Loading...

Ragavan