1000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு முறையீடு

share on:
Classic

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பில் திருத்தம்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

அதில், சர்க்கரை அட்டை வைத்துள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் தடை உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

sasikanth