தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

share on:
Classic

சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக்குற்றப்பிரிவு இணை ஆணையர் உட்பட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில் சென்னை கிழக்கு இணை ஆணையர் அன்பு, மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை கிழக்கு இணை ஆணையராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பாந்தி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேஷ்குமார் உள்ளிட்ட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth