"வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க" - ஸ்டாலின்

share on:
Classic

வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற விஷம பிரச்சாரம் நடை பெறுகின்ற நேரத்தில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியம் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆகவே டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan