அனைத்து பேராசிரியர்களின் விவரங்களையும் தமிழக அரசுக்கு அனுப்ப உத்தரவு..!

share on:
Classic

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறையின் படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும், தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளை மீறி தகுதியற்ற பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan