தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு திட்டம்..?

share on:
Classic

இலவச கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

இலவச மற்றும் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகள் பணம் வாங்கிக்கொண்டே சேர்க்கைக்கு அனுமதிப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதற்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வரும் 20ம் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind