19,426 ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு..!

share on:
Classic

தமிழகத்தில் உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக பள்களில், 16,110 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், 3,316 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ல் தொடங்க உள்ள கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்கி, பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழிக் கல்வியைப் பொறுத்தவரையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும்; 6 முதல் 8-ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும்; 9 முதல் 12-ம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வியைப் பொறுத்தவரையில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan