காவல்துறை மீது மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு..!

share on:
Classic

காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே உள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சென்னை ராமாபுரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய சகோதரனை காப்பாற்ற சென்ற தன்னை வளசரவாக்கம் ஆய்வாளராக இருந்த சந்துரு தாக்கியதாக எஸ்.ஐ. மனோகரன் மனித உரிமை ஆணையத்தில் 2016-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். தாக்கியது மட்டுமின்றி தகாத வார்த்தைகளில் தன்னை திட்டியதாகவும் மனோகரன் தெரிவித்திருந்திருந்தார். இதுதொடர்பான விசாரணையின் முடிவில், மனோகரனுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் சந்துருவிடம் பிடித்தம் செய்யவும் ஆணையம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே உள்ளது எனவும், நிஜ வாழ்வில் இல்லை எனவும் மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan