முன்கூட்டியே கட்டனம் செலுத்தினால் 3.5% வட்டி அளிப்பு : மின் வாரியம்

share on:
Classic

மின் கட்டனத்தை முன்கூட்டியே செலுத்துவோருக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும் என தமிழ்நாடு மின் வாரியம் (TNEB) அறிவிப்பு.

தமிழகத்தில் பொதுவாக மின் உபயோகத்தை கணக்கு எடுத்ததிலிருந்து 20 நாட்களுக்குள் அதற்கான தொகையை செலுத்த வெண்டும் என வரைமுறை உள்ளது. அப்படி, செலுத்தத் தவறினால் மின் இனைப்பு துண்டிக்கப்படும், மேலும் அபராதம் விதிக்கப்படும். இதனால் வெளியூரில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட நாளுக்குள் கட்டனம் செலுத்த முடியாமல் போகலாம் என்பதனால், முன்கூட்டியெ போதுமான அளவு பணத்தை அடிஷனல் டெப்பாசிட் (Additional Deposit) என்ற பெயரில் செலுத்தி இருப்புத் தொகையாக வைத்திருப்பார்கள். சில இன்னல்களை தவிற்பதற்காக, இந்த வசதியினால் பலரும் முன்கூட்டியே டெப்பாசிட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மின் வாரியம் (TANGEDCO), முன் கூட்டியே கட்டனத்தை செலுத்துவோருக்கு 3.5 சதவீதம் வட்டி விகிதம் லாபமாக அளிக்கப்படும் எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் லாபம் வழங்கும் முறை 2019-2020 நிதி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு நேரமும் மிச்சமாகும், கூடவே லாபமும் கிடைக்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan