சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #TNRejectsBJP ஹேஷ்டேக்..!

share on:
Classic

தமிழகத்தில் ஒரு மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெறாத நிலையில் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த 5 தொகுதிகளிலும் படுதோல்வியை அடைந்து உள்ளது பாஜக. ஹெச்.ராஜா, தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கிய போதும் குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே பாஜக பெற்று உள்ளது. நாடு முழுவதும் பாஜக வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளபோது TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind