ஸ்டெர்லைட் போராட்டம்..அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை..நீங்காத நினைவுகள்..!

share on:
Classic

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டமான கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்கள் பேரணியாக வந்தனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைதொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்று  ஓராண்டு நிறைவுடைகிறது. ஆனால் இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind