சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

share on:
Classic

தமிழக சட்டப்பேரவையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். 

மாலை 4 மணிக்கு மீண்டும் கூடும் பேரவை கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு,  துறையின் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

 

News Counter: 
100
Loading...

aravind