
மேஷம்:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
மிதுனம் :
உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் அணுகுவார். இயன்ற அளவில் உதவிபுரிவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர சில மாற்றம் செய்வது அவசியம். பணவரவைவிட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.
கடகம்:
எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும்.பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுப்
பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். ஆனால், உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும் நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
கன்னி :
அவப்பெயர் வாங்குகிற நிலை ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி உதவும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு நம்பிக்கைத் தரும்.
துலாம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
தனுசு :
மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். அறிவுத் திறமையால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் கடின உழைப்பால் வளர்ச்சி பெறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மகரம்:
கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
கும்பம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
மீனம் :
நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆடம்பர பணச்செலவு தவிர்க்கவும். வீடு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.