உங்கள் ராசியால் இன்றைக்கு உங்களுக்கு என்ன பலன்..?

Classic

உங்கள் ராசியால் இன்றைக்கு உங்களுக்கு என்ன பலன்..?  கீழ கொடுக்கப்பட்டிருக்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

மேஷம்: எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நவீன மாற்றம் பின்பற்றுவீர்கள். லாபம் உயரும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். நாடி வந்தவர் களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்

மிதுனம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். ருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடகம்: பகைமை குணம் உள்ளவர் அவமதித்து பேசுவர். பெருந்தன்மையுடன் விலகிச் செல்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். 

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.  சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். 

துலாம் ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றவும். பழைய வீட்டை சீரமைக்க முடியும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். 

விருச்சிகம்:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவதநல்லது. யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களைகவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பிற்பகல் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள். 

தனுசு:தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.  சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகர ராசி அன்பர்களே, உறவினர்களால் செலவுகள் வரக்கூடும். சொந்த பிரச்சனைகளுக்கு சுமூக பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு வரும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். உத்யோகத்தில் கூடுதல் பணியை செய்ய வேண்டிவரும்.

கும்பம்:  சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: மீன ராசி அன்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

News Counter: 
100

aravind