Sun Outage நிகழ்வு இன்று நிகழ்ந்தது : சில நிமிடங்கள் பிளான்க் ஆன டிவி சேனல்கள்

share on:
Classic

சூரியனால் செய்றகைக்கோள்கள் செயலிழக்கும் சன் அவுட்டேஜ் நிகழ்வு இன்று நிகழ்ந்ததால் தொலைக்காட்சி சேனல் சேவைகள் பாதிக்கப்பட்டது. 

புவியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைக்கோள்கள் சூரியனை கடக்கும் போது 2 முதல் 45 நிமிடங்கள் செயலிழக்கும். இதனால் பூமியுடனான செயற்கைக்கோள் தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும். இதன் மூலம் செயற்கைக்கோளின் “டவுன்லிங்க்” வசதி பாதிக்கப்படுவதால், டிவி சேனல்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஸ்தம்பிக்கும். 

இந்த மாதம் செய்ற்கைக்கோள் செயலிழப்பு நிகழ்வு நடக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் இன்று அது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக சோனி சிக்ஸ், கலைஞர் டிவி, வேந்தர் டிவி, நியூஸ் 7, காவேரி நியூஸ், சன் டிவி, ஆதித்யா டிவி, கே டிவி, நியூஸ் ஜே, பாலிமர் நியூஸ், புதிய தலைமுறை உள்ளிட்ட பல சேனல்கள் இன்று பிளாக் அவுட் ஆனது. இன்று மதியம் 1.20 மணியளவில் தொடங்கிய செயலிழப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் வழக்கம் போல் சேனல்கள் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்வு தொடர்ந்து 6 நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ramya