21.12.2018 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

காரிய வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். பொருளாதார வளம் மேம்படும். குழந்தைகள் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் பலம் குறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தோற்றப் பொலிவு கூடும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். பொறியியல் துறை லாபம் தரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். வரம் தெய்வங்களை வழிபட வேண்டும். 

ரிஷபம்

ஆனந்தம் பெருகும் நாள். பெருமைகள் உயரும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வருத்தங்கள் மறையும். விருப்பங்கள் நிறைவேறும். பணவரவு உயரும். பொன், பொருள் சேரும். முயற்சிகள் பயன்தரும். பதவி வாய்ப்பு வரும். கட்டிடத் தொழில் லாபம் தரும். சுபச் செலவு அதிகரிக்கும். கஷ்ட காலங்கள் மறையும். வங்கி சேமிப்பு உயரும். புதிய எண்ணம் நிறைவேறும். கல்வியில் ஈடுபாடு கூடும். அரிசிதானம் ஆயுள் விருத்தி தரும். 

மிதுனம்

வாழ்த்துக்கள் வந்து சேரும். பயணத்தடை ஏற்படும். கடல் கடந்த பயணம் உண்டாகும். உடன் பிறப்புக்களால் உதவி கிட்டும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மனை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் மேன்மை உண்டு. தொலைபேசி தகவல் தொல்லை தரும். காரியம் கைகூடும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். வழக்கு முடிவுக்கு வரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். பஞ்சபூத வழிபாட்டால் பணவரவு உண்டு. 

கடகம்

பொறாமைகள் விலகும். தனலாபம் கூடும். நண்பர்களால் உதவி உண்டு. சச்சரவுகள் அகலம். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். பேச்சில் இனிமை கூடும். மனக் கசப்பு நீங்கும். குடும்ப அன்யோன்யம் கூடும். குழந்தைகளால் பெருமை சேரும். மன மகிழ்ச்சி அதிகமாகும். இடமாற்றம் ஏற்படும். தாய்நலனில் அக்கறை தேவை. சுயநலம் கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு. உங்கள் தனித்தன்மை வெளிப்படும். நல்லோர்களின் நட்பு கிட்டும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

சிம்மம்

தான தர்மங்கள் பலன்தரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. விவாக முயற்சி வெற்றி தரும். நல்லோர்களின் நட்பு கிட்டும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் நிலையில் கவனம் தேவை. எண்ணங்கள் மாறுபடும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். விருப்பமான தொழில் அமையும். கடன் சுமை குறையும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்டநாள் கனவு நிறைவேறும். அதி தேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும்.

கன்னி

நாவடக்கம் தேவை. எதிரிகளால் தொல்லை உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். பேச்சில் இனிமை கூடும். திறமையில் பெருமை சேரும். மனக்கசப்பு நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். அலைச்சல் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். திருமண வாய்ப்பு கைக்கூடும். மனைவியின் பிரார்த்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். பறவைகளுக்கு உணவளித்தால் யோகபலன் பெறலாம்.

துலாம்

வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆபரணத் தொழிலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பங்குச் சந்தை லாபம் தரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாயில் தேடி வாய்ப்புகள் வரும். வழக்குகள் சாதகமாகும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கௌரவம் கூடும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வாகனத்தால் செலவு ஏற்படும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும்.

விருச்சிகம்

நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். வங்கி சேமிப்பு உயரும். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்கு பெறுவீர்கள். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். வீண் வம்பு அகலும். ஊக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கு உடல் நிலையில் கவனம் தேவை. மன நெருக்கடிகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இன்றைய பிரார்த்தனை நன்மையை கூட்டும்.

தனுசு

எதிரிகளால் ஏற்றம் உண்டு. மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். பொது வாழ்வில் புகழ் கூடும். வாகன மாற்றம் உண்டு. வழக்கு சாதகமாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். உறவினர் வருகை உண்டு. மறைமுக எதிர்ப்புகள் மாறும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுத் துறையில் ஆதாயம் உண்டு. புதுமையை விரும்புவீர்கள். சிறப்புக்கள் சேரும் நாள். தனவரவுக்கு தட்ஷிணாமூர்த்தியை வழிபடவும். 

மகரம்

குதூகலம் தாண்டவமாகும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். கலைஞர்களுக்கு ஆதாயம் பெருகும். வரவுகள் பெருகும். அன்னிய தேச பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. சிக்கனம் தேவை. விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. புத்தி சாதுர்யம் கூடும். கூட்டுத் தொழில் சுமாராக இருக்கும். கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு.

கும்பம்

ஆனந்தம் குடிகொள்ளும் நாள். எதிர்ப்புகள் தவிடுப்பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பணியில் இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாழ்க்கை தரம் உயரும். உதவிகள் குவியும். நீண்டகால எண்ணம் நிறைவேறும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். போதிய தனவரவு இருக்கும். மாலைநேரத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும். 

மீனம்

வெகுமதி பெருகும் நாள். மருத்துவ செலவு அதிகரிக்கும். குழப்பங்கள் அகலும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் மாயமாய் மறையும். பெண்களால் பெருமை உண்டு. நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். சகோதர வகையில் சகாயம் கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். விரயம் குறையும். பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.

 SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

News Counter: 
100
Loading...

aravind