22.12.2018 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

உள்ளம் மகிழும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். பேச்சில் கணிவு தேவை. திடீர் செலவு ஏற்படும். மங்கல செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை கூடும். மனைவியால் மதிப்பு உயரும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். அதிதேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும். 

ரிஷபம்

எதிர்ப்புகள் குறையும். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மை தரும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். 

மிதுனம்

தேகப் பலன் கூடும். வெளியூர் பயணம் வெற்றிதரும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணிவும், துணிவும் கூடும். கஷ்ட காலங்கள் மறையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். தனவரவு அதிகரிக்கும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும். 

கடகம்

புத்தி சாதுர்யம் கூடும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெரும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். காரியத்தடை ஏற்படும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். சுபச் செய்தி வரும். பஞ்சபூத வழிபாட்டால் பணவரவு உண்டு. 

சிம்மம்

எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன்தரும். குடும்பபாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும். விபரீத போக்கு மறையும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. பெற்றோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். கருட வழிபாட்டால் கடன் தீரும். 

கன்னி

ஏஜென்ஸி தொழில் ஏற்றம் தரும். அலைச்சலால் அசதி ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். வேலைத் திறன் அதிகரிக்கும். சுப காரியச் செய்தி வரும். அடை, அணிகலன் சேர்க்கை உண்டு. பொருளதாரா வளர்ச்சி உண்டு. உடன் பிறந்தோரால் உதவி கிடைக்கும். முக்கிய எண்ணம் நிறைவேறும். மனம் மகிழும் நாள். உள்ளம் பூரிப்படையும். மனைவியால் அமைதி கெடும். கூட்டுப் பிரார்த்தனை மாற்றம் தரும். 

துலாம்

மனைவாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். உடல் உபாதை அதிகமாகும். பங்குச் சந்தை வியாபாரம் லாபம் தரும். வழக்குகள் வெற்றி தரும் வீண் வம்பு விலகும். மருத்துவச் செலவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தால் நன்மை உண்டு. கோமாதா வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு. 

விருச்சிகம்

பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர். கடன் பிரச்சனை தீர்வு உண்டு. வியாபார வாய்ப்பு உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டு. புத்திர வழியில் தொல்லை உண்டு. வழக்கு வெற்றித் தரும். உடல் ஆரோக்கியம் கூடும். மறைமுக தொல்லை நீங்கும். வீண் வம்பு ஓடி மறையும். வாழ்க்கை வசதி பெருகும். காரிய வெற்றி கிட்டும். ஆலய தரிசனம் அமைதி தரும். இந்திர வழிபாட்டால் இன்பம் கூடும். 

தனுசு

லஷ்மி கடாட்ஷம் பெருகும். நல்ல வாய்ப்புக்கள் நாடி வரும். நல்லவர் நட்பு கூடிவரும். நலிந்த வாழ்வு மேன்மை தரும். வில்லங்கம் விலகும். போட்டிகள் மறையும். தொல்லைகள் அகலும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டு. விவசாய விளைச்சல் மூலம் நற்பலன் உண்டாகும். புதிய சிந்தனை உருவாகும். போட்டி, பொறாமைகள் விலகும். பூமியால் லாபம் உண்டு. ஷர்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும். 

மகரம்

துன்பங்கள் அகலும் நாள். ஒப்பற்ற பலன் சேரும். தொழில் திறமை பளிச்சிடும். அலட்சியப் போக்கு தவிர்க்கவும். பொருள் நஷ்டம் ஏற்படும். வேலைப் பளு கூடும். நிதானம் தேவை. அரசியல் ஆதாயம் உண்டு. குடும்ப சச்சரவு ஏற்படும். விரோத விலகும். படிப்பில் ஆர்வம் கூடும். வருமான வரி தொல்லை ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் சூழ்நிலைகள் பலன்தர சூரிய வழிபாடு அவசியம். 

கும்பம்

நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். நற்செய்தி நாடிவரும். தொழில் வாய்ப்பு கூடிவரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. அந்தஸ்து அதிகமாகும். வாழ்க்கை வசதி பெருகும். இனிய எண்ணம் உதயமாகும். அரசாங்க அனுகூலம் உண்டு. வீடு, மனை, யோகம் உண்டு. தன்னம்பிக்கை கூடும். நிர்வாகத் திறமை கூடும். விநாயகர் வழிபாடு வெற்றி தரும்.

மீனம்

தாராளமான வருமானம் உண்டு. காரிய தாமதம் ஏற்படும். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. மனைவி உடல்நலம் பாதிக்கும். புதிய நட்பு உருவாகும். பொறுப்புகள் கூடும். பெருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிரயாணம் ஏற்படும். பிணிகள் அகலும். இடமாற்றத்தால் பெரிய பலனை அடைவீர். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .  

 

 

News Counter: 
100
Loading...

aravind