18-01-2019 இன்றைய ராசிபலன்

share on:
Classic

மேஷம்:

மன அமைதி உண்டாகும். மனதின் குழப்பங்கள் தீரும். சமூக சீர் நிலை உண்டாகும். மனிதாபிமானம் உண்டாகும். மனதில் உள்ள பயம் நீங்கிவிடும்.ஆதாயம் பெருகும். கடன் கொடுப்பவராக இருப்பீர்கள். உங்களால் நிறைய ஆத்துமாக்கள் வாழ வேண்டி வரும். சமுதாய பிரச்சனைகள் அகலும். வீட்டில் சந்தோஷம் நிலவும். மத வழிபாடு மாற்றம் தரும்.  

ரிஷபம்:

குழப்பங்கள் நீங்கும். நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். வாழ்வில் முன்னேற்ற நிலையை அடைவீர். திருமண முடிவுகள் நல்லதாக அமையும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணம் உருவாகும். பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம்.  

மிதுனம்:

குடும்ப ஒற்றுமை கூடும். சுபச் செய்தி கூடிவரும். தொழில் வளர்ச்சி கூடும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. விவாத முயற்சி வெற்றி தரும். உதவிகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். குடும்ப நலனில் அக்கறை தேவை. குரு வழிபாட்டால் குலம் தழைக்கும். 

கடகம்:

புகழும், பொருளும் பெருகும். கனவு தொல்லை உண்டு. கைப்பொருள் களவு போகும். பயணத்தால் அனுகூலம் உண்டு. குதூகலம் அதிகமாகும். குழப்பங்கள் அகன்று போகும். செலவுகள் குறையும். நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். உறவினரால் உற்சாகம் கூடும். பூர்வீக சொத்து சேரும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும். 

சிம்மம்:

நன்மையான நாள். வாய்ப் பேச்சில் கவனம் தேவை. நோயிலிருந்து பூரண குணமடைவீர்கள். சேய் நலம் கூடும். குடும்ப சேமிப்பு உயரும். வீண் வம்பு விலகும். குடும்பச் சண்டைகள் முற்றிலும் அகன்று விடும். செயல்களில் கவனம் தேவை. வியாபாரத்தால் நன்மை உண்டு. மருத்துவச் செலவு குறையும். குபேர வழிபாடு மேன்மை தரும். 

கன்னி:

இல்லம் தேடி வாய்ப்பு வரும். மன உற்சாகம் கூடும். உடல் உபாதை தோன்றும். தொழில் வழி தொல்லை குறையும். ஆயுள் விருத்தி அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை குறையும். ஸ்தல பயணம் ஏற்படும். சித்ர குப்த வழிபாட்டால் சிந்தனை வளப்படும்.  

துலாம்:

பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாகும். எண்ணிய காரியம் கை கூடும். ஆக்கப்பூர்வமான நாள். எதிர்பார்ப்புகள் குறையும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி மேம்படும். தோல்விகள் விலகும். கட்டிடத் தொழில் லாபம் தரும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும். 

விருச்சிகம்:

இனிய தகவல் வந்து சேரும். தொழில் போட்டி மறையும். ஆதலால் கவனம் தேவை. உணவு பிரியம் அதிகரிக்கும். பாராட்டு பெருகும். உடல் மன நிம்மதி தரும். பண வரவு தாமதமாகும். உடல் சோர்வு ஏற்படும். புதிய தொழில் அமையும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். ஆதித்ய வழிபாடு ஆதாயம் தரும். 

தனுசு:

புகழ் கூடும் நாள். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுபகாரியம் கைகூடும். விரும்பிய பொருள் சேரும். வியாபார மேன்மை உண்டு. வாழ்வில் வளம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். உறவுகளால் நன்மை உண்டு. நண்பரால் செலவு உண்டு. கால்நடையால் பலன் உண்டு. காதலில் மோதல் உண்டு. முயற்சி பலன் தரும். நந்தி வழிபாடு நன்மை தரும்.  

மகரம்:

சந்தோஷம் பெருகும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். அமைதியான நாள். மனைவி உடல் நலம் பாதிக்கும். புதிய நட்பு உருவாகும். பொறுப்புகள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிணிகள் அகலும். உணவு விடுதி லாபம் தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. அரசியலில் புகழ் உண்டு. மாணவர் பாராட்டு பெருவீர். மாருதி வழிபாடு மகிழ்ச்சியைத் தரும்.  

கும்பம்:

எதிரிகளால் ஏற்றம் உண்டு. விளையாட்டு சிந்தனைகள். கல்வியில் மேலோங்கிச் செல்வீர். காதல் எண்ணம் உருவாகும். புதிய பொருள் சேரும். பழைய நட்பினால் பலன் கிடைக்கும். உத்தியோக அலைச்சல் உண்டு. காரிய தாமதம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். 

மீனம்:

இனிப்பான செய்திகள் வரும். வம்புதும்புகள் ஒழியும். புதிய நட்பை தவிர்க்கவும். புத்திர வழியில் கவலை ஏற்படும். போட்டிகள் நீடிக்கும். ஏற்றமான திருமணம் அமையும். நினைத்த திருமணம் நடக்கும். காதல் விவகாரத்தில் நன்மை பயக்கும். மற்றவர் ஆலோசனை தவிர்க்கவும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டம் மாறும். 

 

 

News Counter: 
100
Loading...

mayakumar