ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கு உதவ களம் இறக்கப்பட்ட ரோபோக்கள்

Classic

ஒலிம்பிக் போட்டிகளை காண வரும் வெளிநாட்டினருக்கு உதவுவதற்காக ஜப்பானில் ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அதனைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக, டோக்கியோவில் உள்ள சுரங்க வழி ரயில் நிலையங்களில் தொடு திரை வசதியுடன் கூடிய ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம், ஜப்பான், சீனா மற்றும் கொரிய மொழிகளை பேசக்கூடிய வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind