”நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது”

share on:
Classic

நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து சில எம்.பி.க்கள் கவலை தெரிவித்ததாக குறிப்பிட்டார். வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம், கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் சாலை அமைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கூறிய அவர், காலத்துக்கு ஏற்ப கட்டணம் மாறுபடலாமே தவிர, சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது என்று தெரிவித்தார். 

நல்ல சாலைகள் வேண்டுமென்றால், சுங்கக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் என உறுதியாக கூறினார். மேலும், பள்ளி பேருந்துகள் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind