நாளை மறு நாள் இறுதிகட்ட வாக்குப்பதிவு : இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!!

share on:
Classic

இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 50 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழுகட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆறு கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், ஏழாம் கட்ட வாக்குப்பதிவானது மே 19 நடைபெற உள்ளது. இதில், பீகார், மத்தியபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் உள்ள 3 தொகுதிகளிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள 1 தொகுதிகளுலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் 13, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதில் 50 மக்களவைத் தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. மேற்குவங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நேற்றுடன் பிரசாரம் ஓய்வடைந்தது.
 

News Counter: 
100
Loading...

Ramya