நாளை மத்திய அமைச்சரவையின் 2-வது கூட்டம்..!

share on:
Classic

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கடந்த 30ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த  31ம் தேதியன்று நடைபெற்றது. இதில், 17ஆவது மக்களைவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17ம் தேதியன்று தொடங்கும் எனவும், தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இரண்டாவது மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

Ragavan