சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம்.

share on:
Classic

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பரபரப்பான சூழலுக்கு மத்தியில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், கூட்டம் கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, ஐயனை தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு மற்றும் மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள், பந்தளத்திலிருந்து சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன. இந்த ஆபரணங்கள் நாளை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu