நாளை ரத சப்தமி எனும் புண்ணிய நாள் : பாவங்கள், தோஷங்களை போக்க இதைப்படிங்க..

share on:
Classic

நாளை ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகளுடன், அட்சதை கலந்த நீரில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்கிறது சாஸ்திரம்.

தை மாதம் என்றாலே முழுக்க முழுக்க விசேஷமான மாதம் தான். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல், மகா சங்கராந்தி, தைப்பூசம், தை அமாவாசை என தொடர்ந்து விசேஷ நாட்கள் வருவதால் தை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆன்மீகப் பெரியோர்களால் பார்க்கப்படுகிறது. மாதம் ஒரு முறை வரும் அமாவாசையிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி.

தை அமாவாசையிலிருந்து வரும் ஏழாவது நாள் ரதசப்தமி என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவான், தன்னுடைய ஏழு குதிரைகளுடன் பூட்டப்பட்ட ரதத்தில் நகர்ந்து வரும் நன்னாளாகவும் போற்றப்படுகிறது. தை மாதத்தில் சூரிய பகவான் நகரும் காலம், உத்தாரயன புண்ய காலம் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு உரிய ரதசப்தமி நாளில், உடலில் ஏழு எருக்க இலைகல், கொஞ்சம் பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவற்றை கொண்டு நீராட வேண்டும் என கூறுகிறது சாஸ்திரம்.

புத்தியால் செய்த பாவங்களை போக்க, தலையில் ஒரு எருக்கம் இலை, கண்களால் செய்த பாவங்கள் போக்க இரண்டு இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு எருக்க இலைகளை வைத்து, பசுஞ்சாணம், அட்சதை ஆகியவற்றை வைத்து கிழக்கு பார்த்த படி நின்று சூரிய உதயத்தின் போது நீராடுவது எண்ணற்ற பலன்களை தரும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியோர்கள். பெண்கள் இந்த முறையில் கூடுதலாக மஞ்சள் மட்டும் சேர்த்து நீராடலாம். இதனால் சகல தோஷங்கள் நீங்கி, உடல் உபாதைகள் அகலுவதோடு, மனத்தெளிவுடனும், நிம்மதியுடனும் வாழலாம் என்று கூறுகிறது தர்ம சாஸ்திரம்.

நாளை செவ்வாய்க்கிழமை (12.02.19) ரத சப்தமி ஆகும். நாளைய தினம், அதிகாலையில் ஏழு எருக்க இலைகள், பசுஞ்சாணம், அட்சதை ஆகியவற்றை கொண்டு நீராடினால் தோஷமெல்லாம் நீங்கி, பாவங்கள் எல்லாம் விலகி நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது உறுதி.
 
 

News Counter: 
100
Loading...

Ramya