சாகச விளையாட்டுகளுக்கு பெயர்போன 10 இந்திய சுற்றுலா தளங்கள்..!

share on:
Classic

நன்பர்களுடன் ஜாலியா ஊர்சுற்ற விரும்புவர்களா நீங்கள்..? இந்த வெக்கேஷனுக்கு எங்க போகலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா..? அதுவும், சாகச விளையாட்டுக்களில் ஈடுபட மிகுந்த ஆர்வம் நிறைந்தவர்களா..? இதோ, உங்களுக்கான இடங்கள் தான் இவை. அட்வென்சர் விளையாட்டுகளில் ஈடுபட வெளிநாடு செல்ல தேவையில்லை. இந்தியாவிலேயே பல இடங்கள் உள்ளது. அதிலிருந்து, சிறப்பான தரமான 10 சுற்றுலா தளங்கள் உங்களுக்காக...
 

1. ரூப்குந்த் ட்ரெக் - உத்தர்காந்த் (Offbeat Trekking)...!
ட்ரெக்கிங்கை விரும்புவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. உறைந்திருக்கும் பனிமலைகளுக்கு நடுவே மலையுச்சிக்கு ஏரும் சாகசம் தான் இது. மேலே ஏரும்போது பயங்கரமான திருப்பங்கள் நிறைந்திருக்கும். இந்த மலையேற்ற பாதையில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் உள்ளன, குறிப்பாக அங்குள்ள ஒரு ஏரியின் விளிம்பிற்கு அருகில் அதிகமாக காணலாம். அதனால், இந்த பயணத்தை ‘வாக்கிங் வித் தி டெட்’ அதாவது, இறந்தவர்களுடன் ஒரு பயணம் என்று கூறுகிறார்கள். அனைத்து சாகச பயணங்களில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உங்களுக்கு தைரியம் இருந்தா கண்டிப்பா போயிட்டு வாங்க.

 

2. ஷிம்லா - லேஹ் : மொட்டர்சைக்கிள் பயனம் (Motorcycle Touring)...
பைக்கிள் சாகச பயணம் செய்யவிரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தேகமற்ற சிறந்த இடமாக இந்தியாவில் லடாக் விளங்குகிறது. நீங்கள் உண்மையில் உங்கள் தோழர்களுடன் கிராமப்புறங்களை ஆராய விரும்பினால், இந்த இடத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிள் பயணம் செல்லுங்கள். நீங்களே உங்கள் சொந்த பாதையை ஏற்பாடு செய்யலாம் அல்லது 'ரெய்ட் டி இமிலயா' போன்ற மோட்டார் சைக்கிள் பயணத்திலும் சேர்ந்து செல்லலாம். இந்த பேரணி ஷிம்லாவிலிருந்து தொடங்கி லேஹ் வரை செல்கிறது. உன்னுடைய சகிப்புத்தன்மையை சோதிக்கும் வகையில் நடு முதுகெலும்பு குளிரும் அளவுக்கு இந்த பயனம் இருக்கும். போகும்போது கண்டிப்பா மரக்காம முதலுதவி மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.

 

3. மேகாலயா : குகை பயனம் (Caving)...!
இந்த இடம் அதன் வசீகரமான குகைகளுக்கு பேர்போனவை. இந்தியாவின், மேகாலயாவில் சாகச விளையாட்டுக்களில் சிறந்த குகைப்பாதை பயணமாக உள்ளது. பசுமையான காடுகளுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் நடுவில் உள்ள இந்த குகைகள் கண்டிப்பாக உங்களை கவர்ந்திழுக்கும். இந்த ரிமோட் குகைகளில் பயணம் செய்ய நினைப்பவர்கள், உங்கள் பைகளில் சில உணவை அதிகமாகவே சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே போகும்போது எந்த காட்டு விளங்குகளையும் நீங்கள் சந்திக்கலாம், எனவே சில பாதுகாப்பு உபகரனங்களையும் எடுத்துச் செல்லுங்கள் நண்பர்களே!

 

4. கேரளா : பாராசெய்லிங்க் (Parasailing)...!
 கடலுக்கு நடுவே, பாராஷூட்டில் தொங்கிக்கொண்டு பயனம் செய்தால் எப்படி இருக்கும்..? அதற்க்கான இடம் தான் இது. கேரளாவில் பாயம்பலம் கடற்கரையில் இந்த சாகச விளையாட்டு அமைந்துள்ளது. நடுக்கடலில் பயனித்துக் கொண்டிருக்கும்போது, படகில் கட்டப்பட்டுள்ள ஒரு பாரஷூட்டின் மூலம் 300 அடி மேலே சென்று பறக்கலாம். அந்த உயரத்திலுருந்து கீழே பார்த்தால், நீல நிரத்தில் பரந்துவிரிந்த அரபிக் கடலும், கரையும் அழகாகக் காட்சியளிக்கும்.

 

5. கோவா : ஃப்லை போர்டிங் (Flyboarding)...!
நீர் சாகச விளையாட்டுகளில் இந்தியாவில் உச்சபட்ச சிறந்த இடமாக உள்ளது கோவா. அப்படிப்பட்ட இந்த இடத்திற்கு சென்றுவிட்டு தண்ணீர் விளையாட்டுகளை அனுபவிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் வருத்தப்பட்டுதான் ஆகவேண்டும். உலக அளவில் பிரபலமான ஃப்லை போர்டிங் விளையாட்டு கோவாவின் இந்த பெய்னா பீச்சில் உள்ளது. காலில் நீரை அதிக அழுத்ததில் பீச்சியடிக்கும் ஒரு கருவியை பொறுத்திக்கொண்டு, தனியா ஈடுபடக்கூடிய இந்த விளையாட்டு, வேகமாக உங்களை மேலே எழும்பச் செய்து, சூப்பர்மேனைப் போல் உங்களை உணரவைக்கும். அதனால, கோவா போனா கண்டிப்பா இத மிஸ் பன்னிடாதீங்க, அப்பரம் வருத்தப்படுவீங்க.

 

6. மைசூர் டாண்டம் கேம்ப் : ஸ்கைடைவிங் (Skydiving)...!
வாழ்கையில் நிச்சயமாக அனைவரும் ஏற்படும் ஒரு ஆசை என்று பார்த்தால், அது பறவை போல் பறப்பது தான். அந்த ஆசை நிறைவேர வேண்டும் நினைத்தால், மைசூருக்கு கிளம்புங்கள். ஏனென்றால் இந்தியாவில் ஸ்கைடைவிங் விளையாட்டில் சிறந்து விளங்கும் இடம் தான் மைசூர். பறவையாகப் பறந்துகொண்டே, பச்சைப்பசேலென இருக்கும் பூமியையும், நீலவானத்தையும் அனுபவிக்க இது ஒரு நல்ல விளையாட்டு. ஹெலிக்காப்டர் மூலம் 10,000 முதல் 15,000 அடி உயரம் வானத்தில் சென்று, அங்கிருந்து பாரஷூட்டைக் கட்டிக்கிகொண்டு கீழே விழும் இந்த சாகசம் நம்மை த்ரில்லின் உச்சத்துக்கே எடுத்துச்செல்லும். ‘ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி’ என்று சொல்லக்கூடியவர்களுக்கான சிறந்த விளையாட்டு இந்த ஸ்கைடைவிங் டாண்டம் கேம்ப். (Skydiving Tandem Camp)

 

7. கேரளா : ஃப்லையிங் ஃபாக்ஸ் சாகசம் (Flying Fox Adventure)...!
கேரளா, மூனாரில் பசுமையான குன்றுகளுக்கும் சமவெளிகளுக்கும், நதிகளுக்கும் மேலே உயரமாக பயணம் செய்யும் இந்த விளையாட்டை ஃப்லையிங் ஃபாக்ஸ் என்று அழைக்கின்றனர். இரண்டு மலைகலையும் இனைத்துக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் உங்களை கட்டி தொங்கவிடப்படும். பிறகு, ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு தொங்கிக் கொண்டே நீங்கள் பயணம் செய்ய வேண்டும். வேகமாக இழுத்துச்செல்லும் இந்த பயணத்தின் போது, நீங்கள் இருக்கும் உயரத்திலிருந்து கீழே உள்ள பசுமையான இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். நீங்கள் சாகசச் சுற்றுலாப் பயணியாக இருந்தால் கண்டிப்பாக இந்த விளையாட்டையும் ட்ரை பன்னுங்க.

 

8. மத்திய பிரதேசம், சாத்பூரா மலைகள் : பாறை ஏறும் சாகசம் (Rock climbing)...!
பெரிய பாறைகள் மீது நமது கைகளையும் கால்களையும் மட்டும் பயன்படுத்தி மலையுச்சிக்கு எறும் இந்த ராக் கிலைம்பிங் சாகசம், மத்திய பிரதேசத்தின் சாத்பூரா மலைப்பகுதிகளில் ஈடுபடும் இந்த விளையாட்டு இந்தியாவில் மிக பிரபலமானதாகும். சாத்பூரா மலைகளில் மட்டுமல்லாமல், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், சந்தேரி மற்றும் பச்மாரி ஆகிய இடத்திலும் இந்த விளையாட்டு உள்ளது. நன்பர்களுடன் கூட்டமாக சென்று கலந்துக்கொண்டு உங்கள் உடல் வளிமையைக் காட்டவேண்டிய சாகச விளையாட்டு இது. ஜாலியா போய் ஃபன் பன்னிட்டு வாங்க.

 

9. ரிஷிக்கேஷ், உத்ரான்சல் : பஞ்ஜீ ஜம்பிங் (Bungee Jumping)...!
இந்தியாவில் உத்ரான்சல் மாநிலம், ரிஷிக்கேஷில் உள்ளது இந்த பஞ்ஜீ ஜம்பிங். இதற்க்கான மேடை 83 அடி உயரத்தில் இருக்கிறது. நம் உடல் எடையை மறக்கடிக்கச்செய்யும் இந்த ஜம்பிங், இந்தியாவில் மிகவும் பிரபலமான சாகச விளையாட்டாகும். கங்கை நதியில் மூழ்கியெழுந்து, நன்பர்களுடன் இந்த விளையாட்டை அனுபவியுங்கள். தில் இருந்தா முயற்சி செய்யுங்கள். ரிஷிக்கேஷில் இந்த விளையாட்டை தவிர்த்து மேலும், ரிவர் ராஃப்ட்டிங், பாராகிளைடிங், மவுண்டெயின் க்லைம்பிங் மற்றும் கயாகிங் ஆகிய சிறப்பு விளையாட்டுகளும் உண்டு.

 

10. அந்தமான் - நிக்கோபார் : ஸ்கூபா டைவிங் (Scuba Diving)...!
இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே எரிமலை இருக்கும் இடம் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் ஒன்றான பாரான் தீவு (Barren Island). இங்கு தான் அந்த ஸ்கூபா டைவிங் எனும் கடலுக்குள் குதிக்கும் சாகச விளையட்டு உள்ளது. கண்ணாடி போல் தெளிந்த நீரில் டைவ் அடித்து கடலுக்குள் இருக்கும் வண்ண மீன்கள், பவளப் பாறைகள் மற்றும் கவர்ச்சியான அடித்தள அமைப்புகளை பார்த்து அனுபவிக்கலாம். இது நம் வழ்நாள் முழுவதும் நம் மனதில் நீங்காமல் நினைவிருக்கும்.

இந்த அனைத்து இடங்களும் சாகசத்துக்காக மட்டும் பெயர்போனதல்ல, சொகுசான தங்கும் வசதிகள், விதவிதமான உணவுகள், அழகுப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

News Counter: 
100
Loading...

vinoth