உலகக்கோப்பை லீக் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..... வருணபகவான் ஆட்டத்திற்கு வழி விடுவாரா..?

share on:
Classic

வங்கதேசம், இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த லீக் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

12-வது உலகக்கோப்பை ஆட்டமானது வங்க தேசம் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டிகளில் வங்க தேச அணி 3-ஆட்டங்களில் விளையாடி 1 ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. 

இலங்கை அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஆப்கானிஸ்தானுடன் மோதிய 3 வது லீக் ஆட்டமானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இலங்கை அணி 3 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

News Counter: 
100
Loading...

Saravanan