ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது டோடன்ஹாம் 

share on:
Classic

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அஜக்ஸ் அணியை வீழ்த்தி டோடன்ஹாம் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இரண்டாவது சுற்று அரையிறுதி ஆட்டம் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்றது. இதில் அஜக்ஸ் அணியுடன் டோட்டன்ஹாம் அணி மோதியது. போட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே அஜக்ஸ் அணி வீரர் லிட் முதல் கோலை பதிவு செய்தார்.

இதேபோல் ஆட்டத்தின் 35வது நிமிடத்திலும் அஜக்ஸ் அணி கோல் அடித்தது. முதல் பாதி ஆட்டத்தில் அஜக்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்வாது பாதி ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணி வீரர் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 55, 59 ஆகிய நிமிடங்களில் டோட்டன்ஹாம் அணி வீரர் லூகாஸ் கோல் மழை பொழிந்து அசத்தினார்.

அனல் பறந்த இந்த போட்டியில் டோடன்ஹாம் அணி வீரர் லூகாஸ் இறுதி நேரத்தில் மூன்றாவது கோலை அடித்து மைதானத்தை அதிரவைத்தார். இதன் மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணி அஜக்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜூன் 2 ஆம் தேதி ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் லிவர்பூல், டோட்டன்ஹாம் அணிகள் மோதுகின்றனர். ஐரோப்பிய சேம்பியன்ஸ் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் அணி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்படத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind