பின்க் நகரத்தில் தவிர்க்கமுடியாத சுற்றுலா தளங்கள்...! (பாகம் - 2)

share on:
Classic

பின்க் நகரம் என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இந்த நகரம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் கவரக்கூடிய அழகிய சுற்றுலா தளங்களை கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் செல்லும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

கனக் விருந்தாவன் (Kanak Vrindavan) :
கனக் விருந்தாவன் என்பது ஆராவல்லி மலைகளில் ஒன்றான நாகர்கர் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள அழகிய தோட்டமாகும். இந்த இடம் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. ராஜ்புத் மன்னர் மகாராஜா சவாய் ஜெய் சிங்கால், சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஸ்ரீ கோவிந்த் தியோஜி பாரிசார் என்று அழைக்கப்படும் கனக் விருந்தாவனில், ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை அமைக்கப்ப்ட்டுள்ளது . இந்த தோட்டத்தில் ஒரு கோவில், பல நீரூற்றுகள் மற்றும் சிக்கலான பளிங்குக் கல் அலங்காரங்கள் உள்ளன.

ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் (Albert Hall Museum) :
1880 ஆம் ஆண்டில், ஜெய்ப்பூரின் உள்ளூர் அறுவைசிகிச்சையாளர்களில் ஒருவரான டாக்டர் தாமஸ் ஹோல்பின் ஹென்ட்லி, அப்போது இருந்த மகாராஜா இரண்டாம் சவாய் மாதோ சிங் இந்த மண்டபத்தில் ஒரு அருங்காட்சியத்தை திறக்க பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையை மகாராஜா விரும்பியதனால் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் வடிவம் பெற்றது. இந்த அருங்காட்சியகம் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் தயாரிப்புகளை கொண்டுள்ளது. எகிப்திய தலைநகரமான கைரோவில் உள்ள, ப்ரூக்ஷ் பே எனும் அருங்காட்சியகம், இந்தியாவுக்கு பரிசளித்த 'எகிப்திய மம்மீஸ்'களில் ஒரு மம்மி இங்கு உள்ளது.

சொக்கி தாணி (Chokhi Dhani) :
இந்தியாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான சொக்கி தாணி இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தளமாகும். ஜெய்ப்பூர் பகுதியில் அமைந்திருக்கும் சொக்கி தாணி பாரம்பரிய ராஜஸ்தானிய கிராமங்களை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும். இந்த இடம் 1989-ஆம் ஆண்டில் சுற்றுலாத் தளமாக்கபட்டது. இங்கு உள்ள உணவகங்கள், ராஜஸ்தானிய பாரம்பரிய உணவை அளிக்கின்றன. இங்கு நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரிய நடனக் கலைகள் நிகழ்த்தப்படும். மேலும் இங்கு, ஹெல்த் கிளப், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ராஜஸ்தானின் பிரபலமான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.

கால்டா குரங்கு கோயில் (Galtaji or Galta Monkey Temple) :
ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான கால்டாஜி அல்லது கல்கா குரங்கு கோயில், 18-ஆம் நூற்றாண்டில் திவான் ராவ் கிரிபரமால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஜெய்ப்பூரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையை சுற்றியுள்ள அழகிய ஆரவல்லி மலைகள் மற்றும் அடர்ந்த பசுமையான காடுகள் இந்த இடத்தை அழகாகவும், குளிராகவும் வைத்துக் கொள்கிறது.

அபனேரி படிக்கிணறு (Abhaneri Step Well) :
அபனேரி படிக்கிணறு, ஜெய்ப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 95 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிணறு 13 நிலையடுக்குகளில் 3,500 குறுகிய படிகளைக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய படி கிணறுகளில் ஒன்றாகும். சௌஹான் வம்சத்தின் கிங் சந்தா காலத்தில் கி.பி. 800 மற்றும் கி.பி 900 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியின் தேவி என்றழைக்கப்படும் ஹஷாத் மாதாவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மிகவும் வறண்ட இடமாக இருப்பதால், நீரை சேமிப்பது முக்கியமானது. இந்த படிகள் மிக அதிக அளவு தண்ணீரைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதனுடைய அடிப்பகுதியில் இருக்கும் தண்ணீர் மேற்பரப்பை விட குளிர்ந்ததாக இருக்கும்.

ராம்பாக் அரண்மனை (Rambagh Palace) :
ஜெய்ப்பூர் மஹாராஜாவின் முன்னாள் இல்லமான ராம்பாக் அரண்மனை இப்போது தாஜ் ஹோட்டலால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், பவானி சிங் சாலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இது திறமையான மற்றும் சிறந்த கட்டிடக்கலைக்கான அற்புதமான உதாரணம் ஆகும். இந்த அரண்மனை முகலாய மற்றும் ராஜ்புத் கட்டிடக்கலையின் தனிப்பட்ட கலவையாகும்.

 

News Counter: 
100
Loading...

Ragavan