குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு..சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

share on:
Classic

குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில், விடிய விடிய  பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட இரண்டு  அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன் பின்னர் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

பின்னர் மீண்டும் இரண்டு அருவிகளிலும்  மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கொட்டத் தொடங்கியதால் குற்றால மெயினருவி, ஐந்தருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால், தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

News Counter: 
100
Loading...

aravind