குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!

share on:
Classic

குற்றாலத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

கோடை வெயிலின் காரணமாக குற்றாலத்தில் மழை இல்லாததால் கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது. இதனால் அங்குள்ள சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலாளர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan