சுருளி அருவியில் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைத்துத்தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை

share on:
Classic

சுருளி அருவியில் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைத்துத்தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் சிறப்புமிக்கதாக கம்பம் அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சுருளி வேலப்பர் கோவிலும், கைலாய குகையும், சிவன் கோவிலும் உள்ளதால் இது புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக  சுருளி அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக நின்று குளிப்பதற்கும் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாய் இருப்பதற்கும் அமைக்கபட்டிருந்த தடுப்புக் கம்பிகள் முழுவதும் சேதம் அடைந்தன. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் பாதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சுருளி அருவியில் குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைத்துத்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind