வால்பாறைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்..!

share on:
Classic

கோடை விடுமுறையை ஒட்டி வால்பாறைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சில நாட்களாக பெய்த சாரல் மழையால் சீரான தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால் கோடை விடுமுறையை கொண்டாட விரும்பும் சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமில்லாது, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள் பச்சை போர்வை போர்த்தியதை போல் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் நின்று புகைப்படம் எடுத்தும், கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றில் குளித்தும் மகிழ்கின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan