மலர்க் கண்காட்சியை காண கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

share on:
Classic

கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மலர்க் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். 

கொடைக்கானலில் கோடைவிழா களைகட்டியுதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை அவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பல வண்ண மலர்களாலும், இலைகளாலும் வடிவமைக்கப்பட்டுள்ள வீடு, குதிரை உடல் வடிவில் நாராயணண் உருவம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

இதே போல, பசுமைப்பள்ளத்தாக்கு, குணா குகை, ஏரிச்சாலை, வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட கொடைக்கானலின் பல்வேறு இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

News Counter: 
100
Loading...

aravind