பாலஸ்தீனத்தை வென்றது இஸ்ரேல்... அங்கீகரித்தது ஆஸ்திரேலியா...

share on:
Classic

அமெரிக்கா அதிபரை தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமரும் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தார்.

பல ஆண்டுகால ஜெருசலேமை தங்கள் தலைநகராக மாற்றிக்கொள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்க்கு இடையே போர் நிலவி வந்தது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஐக்கிய நாடுகள் அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதற்க்கு தொடர்ந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்களும் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். மேலும் அதன் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து மேற்கு ஜெருசலேமுக்கு கூடிய விரைவில் மாற்றப்படும் என அறிவித்தார். இதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் உலக நாடுகளிடையே அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

News Counter: 
100
Loading...

youtube