டி.ஆர்.பாலு திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராகத் தேர்வு..!

share on:
Classic

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி-க்களின் கூட்டத்தில் டி.ஆர்.பாலு அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி-களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தி.மு.க. எம்.பி.க்களான, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக டி.ஆர்.பாலுவும் துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டார்கள். திமுகவின் மக்களவைக் குழு கொறடாவாக ஆ.ராசாவும் பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

News Counter: 
100
Loading...

Ragavan