உங்களுக்கு வேண்டிய 100 சேனல்களை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் ...

share on:
Classic

இந்தியாவின் டெலிகாம் ஒழுங்குமுறை நிறுவனமான TRAI கடந்த வாரம் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய ஒழுங்குமுறை வெளியிட்ட நிலையில், அதனை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய கட்டண ஒழுங்குமுறை :

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தொலைகாட்சியில் வரும் ஒவ்வொரு சேனல்களுக்கு ஒவ்வொரு கட்டணத்தை நிர்ணயம் செய்தது TRAI. அதனடிப்படையில் மக்கள் தங்களுக்கு வேண்டிய சேனல்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் தாங்கள் எத்தனை சேனல்களை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற கட்டணத்தை மட்டும் தெளிவாக கொடுத்தால் போதும். இதன் மூலம் ஒளிவு மறைவற்ற ஒரு நிலையை உறுதிசெய்தது அந்நிறுவனம். 

மக்கள் மனதில் எழுந்த சந்தேகம் :

எனினும் இதில் சேனல் உரிமையாளர்களுக்கும்,கேபிள் ஆபரேட்டர்களுக்கும், பொது மக்களுக்கும் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இதனை தெளிவு படுத்தும் வண்ணம் தனது செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது TRAI. இந்த புதிய திட்டத்தில் எத்தனை சேனல்கள் அடங்கும்,மக்கள் கேட்கும் சேனல்கள் அனைத்தும் அளிக்கப்படுமா போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தது. 

தெளிவுபடுத்திய TRAI :

அதில் 130 ருபாய் பேக்கிற்கு மக்கள் 100 standard defintition(SD) சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம். இதை  முழுக்க முழுக்க மக்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யபட்டுள்ளது. DTH நிறுவனமோ கேபிள் ஆபரேட்டர்களோ இந்த சேனலை தேர்வு செய்யும் படி மக்களை வற்புறுத்த முடியாது.மேலும் தடையற்ற ஒளிபரப்பையும் அளிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் DTH நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind