சேனல்களை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... டிராய் அறிவிப்பு

share on:
Classic

தேவையான டி.டி.எச் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டத்தின் கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

தேவையற்ற சேனல்களை நீக்கி விட்டு தங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும் சந்தாதாரர்கள் தேர்வு செய்துகொள்ளும்படி மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ’டிராய்’ அறிவித்திருந்தது. டிராயின் இந்த திடீர் அறிவிப்பிற்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உட்பட சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிராயின் இந்த முடிவால் பொதுமக்கள் தான் அதிகப்படியாக பாதிக்கப்படுவார்கள் என கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அதிர்ச்சிக்குண்டை தூக்கி வீசினர். இருந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தனது அதிரடி முடிவை டிராய் அமல்படுத்த முயன்றது. 

இதன் முதற்படியாக, கடந்த 1-ஆம் தேதி முதல் புதிய சேனல் நிர்ணய விதியானது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, புதிய சேனல்களை தேர்வு செய்வதிலும், பழைய சேனல் பேக்குகளை நீக்குவதிலும் பொதுமக்களுக்கு குழப்பம் இருப்பதாக டிராயிடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், சேனல்களை சந்தாதாரர்களே தேர்வு செய்துகொள்ளும் முறையின் கால அவகாசமானது அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டம் வரை சந்தாதாரர்கள் தங்களது பழைய சேனல் தேர்வு முறையையே பின்பற்றலாம். அதன் பிறகு, சந்தா செலுத்தி தேர்வு செய்தால் மட்டுமே சேனல்களை பார்த்து ரசிக்கும் முறை அமலுக்கு வரவுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar