டிவி சேனல்களுக்கான புதிய விலை...! டிராயின் கால அவகாசம் நீட்டிப்பு

share on:
Classic

மக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் டிவி சேனல்களை தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும், பார்க்கப்படும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தலாம் எனவும் டிராய் வெளியிட்டிருந்த அறிவிப்பின் கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

சேனல்களை தேர்வு செய்ய கடைசி தேதி:

மக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களை தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்புடன் கடந்த மாதம் 28-ஆம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டது. பின்னர் அது நீட்டிக்கப்பட்டு இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் சப்ஸ்கிரைப் செய்துகொள்ள வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றாலும் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் சேனல்களில் மாற்றமோ அல்லது திடீர் நிறுத்தமோ இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய முறையை மக்கள் சுமூகமாகவும், எந்த குறைகளுமின்றி தேர்வு செய்ய வசதியாகவும் இருக்க டிராய் அமைப்பு முயற்சித்துள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி, டிஜிட்டல் டிவி, டிடிஹெச் சேவைகள் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும்  கட்டணம் செலுத்தினால் போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு டிவி சேனல்களை தேர்வு செய்வதில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடிப்படை சேனல் தொகுப்பின் விலை:

அனைத்து வாடிக்கையாளர்களும் அடிப்படை சேனல் தொகுப்பை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். இதன் விலை ரூ.154 ஆகும். அதன்பிறகு தாங்கள் பார்க்க விரும்பும் சேனலுக்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே போல் தனித்தனியாக அல்லாமல் ’காம்போ’ (combo) சேனல்களின் தொகுப்பையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வகையான காம்போ சேனல்களின் தொகுப்புகளுக்கு மொத்தமாக கட்டணம் செலுத்த வேண்டும்.

 

சப்ஸ்கிரைப் செய்யும் முறை:

ஏர்டெல் டிவி , டிஷ் டிவி , எஸ்.சி.வி நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுக்கான விலையை குறிப்பிட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை பார்த்து மக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், சப்ஸ்கிரைப் செய்வதற்கான வழிமுறைகளையும் தங்களது இணையதளங்களில் வெளியிட்டுள்ளன. விரிவான விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

News Counter: 
100
Loading...

aravind