’உச்சக்கட்டம்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு..!!

share on:
Classic

கன்னட சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் சுனில் குமார் தேசாயி.

சஸ்பேன்ஸ் படங்களுக்கு பெயர் போன இவருடைய இயக்கத்தில் சாய் தன்ஷிகா, கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் உச்சக்கட்டம். திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ளது அதில் ஒரு பெண் கால்களில் இரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயந்தில் மிரண்டு போவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப் பட்டிருந்தது.

இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் இப்போது உச்சக்கட்டம் படத்தின் ட்ரைலரும் வெளியாகியுள்ளது. நடிகர் கிச்சா சுதீப் ஓட குரலில் ஆரம்பிக்கும் இந்த ட்ரைலர் திரில்லர் மற்றும்  சஸ்பேன்ஸ் நிறைந்த ட்ரைலரா இருக்கிறது. சஞ்ஜாய் சௌத்ரியின் பின்னணி இசையில் உருவாகிருக்கும் இந்த படத்தை டி கிரியசன் சார்பில் தேவராஜன் தயாரித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் உச்சக்கட்டம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan