தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரயில் கொள்ளையர்கள் : வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது..

share on:
Classic

சேலம் - கோவை இடையே தொடர் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட 4 வட மாநிலத்தவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சேலம் - கோவை இடையே கடந்த சில வாரங்களாக ரயிலில் பயணித்த பெண்களிடம் தொடர் கொள்ளை நடைபெற்று வந்தது. இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் தனிப்படையினர் அமைத்து அந்த கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனடிப்படையில் நேற்று 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர்கள் என்றும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், ரயில் மெதுவாக செல்லும் இடங்களை நன்கு அறிந்து வைத்து, பெண்களை குறிவைத்து அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், 100 பவுன் கொள்ளையடித்தவுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிடுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்ததையும் காவல்துறையினர் கண்டுபிடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 53 பவுன்களை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ramya