விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் திட்டம் அமல்

Classic

விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டி.வி. சேவை, திட்டமிட்டபடி இன்று அமலுக்கு வருகிறது.

டி.டி.எச். சேவையிலும், கேபிள் டி.வி. சேவையிலும் நாம் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் செலுத்தும் புதிய முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. கடந்த மாத இறுதியிலேயே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும் வகையில், இத்திட்டம் இன்று தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த புதிய நடைமுறை, இன்று திட்டமிட்டபடி அமலுக்கு வருகிறது. இந்த தகவலை ‘டிராய்’ அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind